SELANGOR

56  சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச மருத்துவப் பரிசோதனைகள்

ஷா ஆலம், பிப் 2: இவ்வாண்டு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம் இம்மாதத்தின் மத்தியில் தொடங்கப்படும்.

இத்திட்டம் 56 தொகுதியிலும் கட்டங் கட்டமாக நடைபெறும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார். இருப்பினும் திட்டத்தின் முதல் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

அனைத்து குடியிருப்பாளர்களும் பயனடைவதை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு திட்டத்தின் முறை சற்று மாறுபட்டு இருக்கும்  என ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக ‘தெக்லைன்’ பயன்படுத்த விரும்புகிறோம் அதாவது தற்காப்பு சிறந்த முறையாகும் என்பதாகும். இது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அதிகமான மக்கள் புரிந்து கொள்வதை உறுதி செய்யும்.

“புற்றுநோய் பரிசோதனை, பல், கண், காது பரிசோதனை மற்றும் பெண்களுக்கான மேமோகிராம் உள்ளிட்ட பரிசோதனை திட்டமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

2024 வரவு செலவுத் திட்டத்தின் போது சிலாங்கூர் இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்தைத் தொடர RM3.2 மில்லியன் ஒதுக்குவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

சிலாங்கூர் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.


Pengarang :