NATIONAL

எல்-நினோவைத் தொடர்ந்து லா நினா பருவநிலை மாற்றம் 2024 மத்தியில் ஏற்படும்

ராய்ட்டர்ஸ், பிப் 9 – வலுவான எல்-நினோ ஆண்டைத் தொடர்ந்து பசிபிக்
பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறான குளிர் நிலையை ஏற்படுத்தக்கூடிய
லா நினா பருவநிலை மாற்றம் 2024 ஆண்டு மத்தியில் ஏற்படும் என
அமெரிக்க அரசாங்கத்தின் வானிலை முன்கணிப்பு மையம் கூறுகிறது.

இந்த பருவநிலை மாற்றம் பொதுவாக ஆஸ்திரேலியா, தென்கிழக்காசியா
மற்றும் இந்தியாவுக்கு அதிக மழைப் பொழிவை ஏற்படுத்தும் வேளையில்
அமெரிக்காவின் தானிய உற்பத்தி பகுதிகளில் கடும் வறட்சியை
உண்டாக்கும் என்று அது தெரிவித்தது.

வசந்த காலத்தில் செய்யப்படும் இத்தகைய கணிப்புகள் நம்பகத்தன்மை
குறைந்தவையாக இருந்தாலும் வலுவான எல் நினோ பருவநிலை
மாற்றத்திற்கு பிறகு லா நினா ஏற்படுவது வரலாற்று மரபாக இருந்து
வந்துள்ளது என்று தேசிய வானிலை சேவைக்கான பருவநிலை மாற்ற
முன்கணிப்பு மையம் (சி.பி.சி.) கூறியது.

தற்போதைய எல் நினோ பருவநிலை மாற்றம் ஆசியாவில் கடும்
உஷ்ணம் மற்றும் வறட்சியையும் அமெரிக்காவின் பல பகுதிகளில்
வழக்கத்திற்கு மாறாக கடும் மழையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழல்
எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு மத்திம நிலையை
உருவாக்கும் என்று அந்த மையம் குறிப்பிட்டது.

இந்த எல் நினா பருவநிலை மாற்றம் வரும் ஜூன் மற்றும் ஆகஸ்டு
மாதங்களுக்கு இடையே ஏற்படும் சாத்தியம் உள்ளதாக சி.பி.சி. தனது
மாதாந்திர முன்கணிப்பில் தெரிவித்தது.

இந்த எல் நினா பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில்
கோதுமை மற்றும் சோள உற்பத்தியும் பிரேசில் உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் சோயாபீன், சோளம் உள்ளிட்ட விளைபொருள்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மூன்று ட்ரிலியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தைக் கொண்ட
இந்தியாவுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலம்
மிகவும் முக்கியமானதாகும். இக்காலக்கட்டத்தில் வேளாண் பயிரீடு,
நீர்தேக்கங்களில் நீர் சேகரிப்பு மற்றும் கடல் உணவு வளர்ப்புக்குத்
தேவையான நீரில் 70 விழுக்காட்டை இந்த பருவமழை வழங்குகிறது.


Pengarang :