SELANGOR

ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்துக்கு மின்கம்பி இணைப்பில் ஏற்பட்ட பழுதே காரணம்

கோலாலம்பூர், பிப் 13 – செராஸ், ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் 70வது
புளோக்கின் 17வது மாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட
தீவிபத்துக்கு மின்கம்பி இணைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம் என
கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் எண் கொண்ட வீட்டில்
முதலில் தீ ஏற்பட்டது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
இயக்குநர் முகமது சால்லே அப்துல் கூறினார்.

இந்த தீவிபத்துக்கு வானவெடி காரணமாக இருந்ததாக கூறப்படுவதை
மறுத்த அவர், மின் கம்பிகளில் ஏற்பட்ட பழுதே இவ்விபத்துக்கான
முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது என்றார்.

இந்த விபத்து தொடர்பான தடயவியல் சோதனை டி.பி. எனப்படும் மின்பகிர்வு பெட்டியை மையமாகக் கொண்டுள்ளது. இந்த தீவிபத்துக்கு 90 விழுக்காடு இதுவே காரணமாக இருக்கும் என நாங்கள் கருதும் வேளையில் மேலும் பத்து விழுக்காடு தொழில்நுட்பம் சார்ந்த சோதனைகளை மையமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அங்கிருந்து தொடங்கிய தீ இரண்டாம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும்
பரவியது என இங்குள்ள ஸ்ரீ செராஸ் தேசிய பள்ளியில்
அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் செய்தியாளர்களைச்
சந்தித்த போது அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட அந்த தீவிபத்தில் அந்த
அடுக்குமாடி குடியிருப்பின் 17வது மாடியிலுள்ள ஐந்து வீடுகள் முற்றாகச்
சேதமுற்றன. இச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திலிருந்த தீயணைப்புக் குழாய்கள் பயன்படுத்த முடியாத
நிலையில் இருந்ததாகக் கூறப்படுவதை மறுத்த முகமது சால்லே, அந்தகட்டிடத்தில் உள்ள ஹோஸ் ரீல் எனப்படும் தீயணைப்பு சுருள் குழாய்களே செயல்படவில்லை என்றார்.

இது போன்றப் பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய
மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள அனைத்து அடுக்குமாடி
குடியிருப்புகளிலும் சோதனை மேற்கொள்வதற்காகச் சிறப்பு பணிக்குழுவை
தமது தரப்பு அமைக்கவுள்ளது எனவும் அவர் சொன்னார்.


Pengarang :