NATIONAL

வடகிழக்கு பருவமழையின் போது ஆற்றோர நடவடிக்கைகளைக் கவனத்துடன் மேற்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்து

சிபு, பிப் 13 – தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தின் போது
ஆற்றோரங்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொது மக்களை தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

திடீர் நீர் பெருக்கு ஏற்படும் சாத்தியத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக ஆற்றில்
ஏற்படும் மாற்றங்களை பொது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன்
கண்காணித்து வர வேண்டும் என்று சரவா மாநிலத்தின் சிபு பிராந்திய
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் எண்டி அலி கூறினார்.

ஆற்றில் நீர் மட்டம் அதிகரிப்பது, நீரின் வர்ணம் மாறுபடுவது, நீரின்
வேகம் அதிகரிப்பது மற்றும் நீரில் குப்பைக்கூளங்களும் அடித்துச் செல்வது
ஆகியவை ஆற்றில் திடீர் நீர் பெருக்கு ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்
என அவர் சொன்னார்.

இத்தகைய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பாதுகாப்பான பகுதிக்கு
உடனடியாக இடம் பெயரும் அதேவேளையில் இது குறித்து தீயணைப்புத்
துறைக்கும் உடனடியாகத் தகவல் கொடுக்க வேண்டும் என அவர்
ஆலோசனை கூறினார்.

ஆற்றோரங்களில் குறிப்பாகத் தற்போதை வடகிழக்கு பருவமழையின் போது
பொழுது போக்கு நடவடிக்கைளில் ஈடுபடுவோர் மிகுந்த கவனத்துடன்
இருக்க வேண்டும் என அறிவுறுத்த விரும்புகிறேன். வானிலை நிலவரம்
தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து செவிமடுத்து வரும்
அதேவேளையில் ஆற்றோரத்திலிருந்து பாதுகாப்பான இடத்தில்
கூடாரங்களை அமைக்கும்படியும் பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்
என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

ஆற்றோரங்களில் அல்லது பொழுதுபோக்கு மையங்கள் அல்லாதப்
பகுதிகளில் பொதுழுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவோர் அது குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :