NATIONAL

இரண்டு வீடுகள் மற்றும் மழலையர் பள்ளி ஒன்று தீப்பிடித்ததில் பதின்ம வயது சிறுவனுக்குத் தீக்காயம்

ஜோகூர் பாரு, பிப். 13: நேற்றிரவு ஜாலான் லெடாங் தாமான் ஜோகூரில் இரண்டு வீடுகள் மற்றும் மழலையர் பள்ளி ஒன்று தீப்பிடித்ததில் ஒரு பதின்ம வயது சிறுவன் தலையில் இரண்டாம் நிலை தீக்காயம் ஏற்பட்டது.

இரவு 8.25 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாகத் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் உடனே 28 பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் துணை தீயணைப்புத் தலைவர் முகமட் சுஹைமி அப்துல் ஜமால் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது பதின்ம வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“தீயில் இரண்டு வீடுகள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, அவை ஒவ்வொன்றும் தீயினால் நாசமாகிருந்த நிலையில் மழலையர் பள்ளி 30 சதவீதம் சேதடைந்தது. மேலும், இச்சம்பவத்தில் நான்கு மோட்டார் சைக்கிள்களும் பாதிக்கப்பட்டுள்ளன.” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை மீட்பு சேவை குழு (ஈஎம்ஆர்எஸ்) உறுப்பினர்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு (எச்எஸ்ஏ) அனுப்பப்பட்டார்,” என்று முகமட் சுஹைமி கூறினார்.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.

நேற்றிரவு 10.46 மணி அளவில் மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிவடைந்தது.

– பெர்னாமா


Pengarang :