ஷா ஆலம், பிப் 15: பொதுமக்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதை எளிதாகும் வகையில் மெனாரா எம்பிஏ ஜேயின் நிலை 1 இல் டிரைவ்-த்ரூ கவுண்டரை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) திறந்துள்ளது.

அக்கவுண்டர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

“எம்பிஏஜே மதிப்பீட்டு வரியை செலுத்துவோம். ஒன்றாக நம் பொறுப்பை நிறைவேற்றுவோம். உங்கள் ஒத்துழைப்பு, எங்கள் வெற்றி” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 03-42857004 /7282/7122/7043 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது [email protected] முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.