ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 28,858 பாலஸ்தீனர்கள் பலி

காஸா, பிப் 19 – பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கி
135 நாட்கள் ஆன நிலையில் காஸா தீபகற்பம் மீது பல பணி நேரத்திற்கு
நீடித்த தாக்குதல் காரணமாகப் பெரும் எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்கள்
உயிரிழந்தனர்.

காஸாவின் மத்தியில் உள்ள நகரங்கள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது
இத்தாகுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவ மற்றும் உள்ளுர்
வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனமான
வாஃபா செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதாக அது கூறியது.

அல்-ஜவாய்டா நகர், டெய்ர் அல்-பாலா நகர் மற்றும் நுஸாய்ரிட்
அகதிகள் முகாம் ஆகிய இடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த
தாக்குதலில் 40 பொது மக்கள் உயிரிழந்ததோடு பெரும்
எண்ணிக்கையிலானோர் காயமுற்றனர் என்று வாஃபா ஊடகவியலாளர்
கூறினார்.

இதனிடையே, தென் காஸாவின் கான் யூனிஸ் நகரிலுள்ள சில வீடுகளை
குறி வைத்து இஸ்ரேல் மேற்கொண்டத் தாக்குதல்களில் 20 பேர்
உயிரிழந்தனர்.

மேலும், தென் பகுதி நகரான ராஃபாவில் உள்ள ஒன்பது வீடுகள் மீது
இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில 13 பேர் பலியான
நிலையில் மேலும் பலர் காயங்களுக்குள்ளாகினர்.

ராஃபா கடற்கரை நோக்கி இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் நடத்திய அதே
சமயத்தில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அந்நாட்டுப் படைகள்
பீரங்கித் தாக்குதல்களை நடத்தின.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 28,858 பேர்
கொல்லப்பட்டுள்ளதோடு 68,677 பேர் காயமுற்றுள்ளனர்.


Pengarang :