NATIONAL

கேஎல் சென்ட்ரல் மற்றும் நாடளுமன்றம் இடையே இலவச ஷட்டில் வேன் சேவை

கோலாலம்பூர், பிப் 23 – கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் (கேஎல் சென்ட்ரல்) மற்றும் நாடளுமன்றம் இடையே இலவச ஷட்டில் வேன் சேவைகளை பிப்ரவரி 26 முதல் மார்ச் 27 வரை 15 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையை முன்னிட்டு ரேபிட் பஸ் எஸ்டிஎன் பிஎச்டி (ரேபிட் பஸ்) வழங்குகிறது.

ரேபிட் பஸ் எஸ்டிஎன் பிஎச்டி, டி851 சேவையானது நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்பவர்களின் வசதி மற்றும் சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்கும், பார்க்கிங் பகுதியில் நெரிசலைக் குறைப்பதற்கும் வழங்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

“இந்த இலவச வேன் சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பீக் ஹவர்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும், நெரிசல் இல்லாத நேரங்களில் 60 நிமிடங்களுக்கு ஒரு முறையும் செயல்படும்” என்று அறிக்கை கூறியது.

இந்தச் சேவையானது கேல் சென்ட்ரலில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்புப் புறப்பாடு நிலையத்திலிருந்து மற்றும் தாமான் பொத்தானிக் பெர்டானா மல்டிலெவல் பார்க்கிங் இடத்திலிருந்து (ஐந்து கிமீ – 15 நிமிடங்கள்) நாடளுமன்றத்தின் கட்டிடத்திற்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்லும்.

இலவச ஷட்டில் வேன் சேவை பற்றிய கூடுதல் தகவல்களை www.myrapid.com.my மற்றும் ரேபிட் கேல் சமூக ஊடகத் தளங்களில் பெறலாம்.

இந்த ஆண்டு 69 நாட்களுக்கு கூடும் நாடாளுமன்றத்தின்  முதல் அமர்வு பிப்ரவரி 26 முதல் மார்ச் 27 வரை 19 நாட்களுக்கு நீடிக்கும்.

– பெர்னாமா


Pengarang :