NATIONAL

மலேசியாவில் நாளை மார்ச் 12ஆம் தேதி நோன்பு தொடங்குகிறது

கோலாலம்பூர், மார்ச் 11- மலேசியாவிலுள்ள முஸ்லீம்கள் நாளை மார்ச்
12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் நோன்பை கடைபிடிக்கத்
தொடங்குவர் என்று அரச முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியல்
சைட் அகமது கூறினார்.

மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலின் பேரில் மாட்சிமை தங்கிய பேரரசர்
இட்ட உத்தரவின் அடிப்படையில் மலேசியாவிலுள்ள அனைத்து
மாநிலங்களுக்கான நோன்பு தொடங்கும் தேதி நிர்ணயிக்கப்பட்டது என்று
அவர் சொன்னார்.

அரச முத்திரைக் காப்பாளரின் இந்த அறிவிப்பு ஆர்.டி.எம். வாயிலாக
நேற்றிரவு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மலேசியாவிலுள்ள முஸ்லீம்கள் நோன்பை தொடங்குவதற்கான தேதியை
உறுதி செய்வதற்கு ஏதுவாக மார்ச் 10ஆம் தேதி பிறை பார்க்கப்படும்
என்று அரச முத்திரைக் காப்பாளர் அலுவலகம் கடந்த மார்ச் 3ஆம் தேதி
அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்திருந்தது.

ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் கிச்சில், மலாக்காவின் தஞ்சோங்
பிடாரா, கம்போங் பாலிக் பத்து, மெனாரா கோலாலம்பூர், புத்ராஜெயா
அனைத்துலக மாநாட்டு மையம் உள்ளிட்ட 29 இடங்களில் பிறை
பார்க்கப்படும் என்றும் அவர் கூறியது.


Pengarang :