NATIONAL

எண்பத்தொரு சதவீதம் பேர் பாயுங் ரஹ்மா திட்டத்தில் திருப்தி அடைந்துள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 13 – எண்பத்தொரு சதவீதம் பேர் ரஹ்மா பாஸ்கெட்ஸ், ரஹ்மா விற்பனை மற்றும் ரஹ்மா பேக்கேஜ் ஆகியவற்றை உள்ளடக்கிய பாயுங் ரஹ்மா திட்டத்தில் திருப்தி அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப் பட்ட பாயுங் ரஹ்மா திட்ட ஆய்வில், 87 சதவீதம் பேர் இந்த திட்டம் தொடர வேண்டும் என்று கேட்டுகொண்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் பௌசியா சாலே தெரிவித்தார்.

 

கூடுதலாக, 73 சதவீதம் பேர் பாயுங் ரஹ்மா திட்டம் தங்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க உதவியது என்று ஒப்புக்கொண்டார்.

“இது சம்பந்தமாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு சவால்களை எதிர்கொள்ள பாயுங் ரஹ்மா திட்டங்களைத் தொடரவும் விரிவுபடுத்தவும் உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் மக்களவை கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

ரஹ்மா திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அது புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து ராசா எம்பி சா கீ சின் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மார்ச் 1 முதல், பாயுங் ரஹ்மா திட்டம் பாயுங் ரஹ்மா மடாணி திட்டமாக மறுபெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :