NATIONAL

இஸ்ரேல் தயாரிப்புகள் என சந்தேகிக்கப்படும் 73 பேரீச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் – ஜேகேடிஎம்

கிள்ளான், மார்ச் 13: நேற்று உணவு சேமிப்புக் கிடங்கில் இஸ்ரேல் தயாரிப்புகள் என சந்தேகிக்கப்படும் 73 பேரீச்சம்பழப்   பாக்கெட்டுகள்   அரச மலேசிய  சுங்கத்துறை (ஜேகேடிஎம்) பறிமுதல் செய்தது.

காலை 11.30 மணியளவில் நடத்திய சோதனையில், ‘ஆர்கானிக் ஜம்போ மெட் ஜூல் டேட்ஸ்’ என்ற லேபிகளுடன் கூடிய தயாரிப்பு ஒன்று மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூர் சந்தையில் விற்கப்படும் என நம்பப் படுவதாகச் சுங்கத்துறை துணை இயக்குநர் ஜெனரல் (அமலாக்கம் மற்றும் இணக்கம்) டத்தோ சசாலி முகமட் கூறினார்.

“RM678 மதிப்புள்ள மொத்தம் 14.6 கிலோகிராம் பேரீச்சம்பழப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பேக்கில் உள்ள தயாரிப்பு விவரக்குறிப்புகள் ஆய்வு செய்ததில் அவை ‘இஸ்ரேலின் தயாரிப்பு’ என்ற வாசகமும் கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்புகள் 2022 முதல் ஐரோப்பிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வியாபாரத்தின் உரிமையாளராக நம்பப்படும் உள்ளூர் நபர் விசாரணைக்கு உதவுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டதாகவும், சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (D) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM500,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் தயாரிப்புகள் என்று சந்தேகிக்கப்படும் பொருட்களை விற்கும் வளாகம் தொடர்பாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப் பட்டதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :