லாபுவான், மார்ச் 13: இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை வறண்ட நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி லாபுவான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து 2.8 மில்லிமீட்டர் (மி.மீ.) முதல் 29.6 மி.மீ வரை என மழைப்பொழிவு குறைந்துள்ளதாக பெர்னாமாவிற்கு அளித்த அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“மார்ச் 8 முதல் இன்று வரை எந்த மழையும் பதிவு செய்யப்படவில்லை. இது தற்போதைய வெப்பம் மற்றும் வறண்ட நிலைமையை மோசமாக்குகிறது. ஆனால், மார்ச் இறுதி முதல் ஏப்ரல் வரை நாட்டில் இடியுடன் கூடிய அதிக அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த தொடர்ச்சியான வறண்ட காலம் வடகிழக்கு பருவமழை காலத்தில் முடிவு மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் இடையேயான எல் நினோவால் ஏற்படுகிறது.

எனவே, நிலைமையை மோசமாக்கும் செயல்களைத் தவிர்ப்பதன் மூலம் கவனமாக இருக்குமாறு  பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக திறந்தவெளி எரிப்பு தவிர்ப்பது ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா