NATIONAL

மாணவர்களிடையே நாளிதழ்கள் படிக்கும் பழக்கம், அவர்களின் மலாய் மொழியின் தேர்ச்சியை வலுப்படுத்தும்

புத்ராஜெயா, மார்ச் 14 – பள்ளிகளில் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களிடையே மலாய் மொழியின் தேர்ச்சியை வலுப்படுத்த முடியும் என கல்வி அமைச்சு கருதுகிறது.

இந்த நோக்கத்திற்காக, நாட்டின் முக்கிய மலாய் மொழி நாளிதழ்களான பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா மற்றும் சினார் ஹரியான் போன்ற இதழ்களுக்கு வாடிக்கையாளர்களாகப் பள்ளிகள்  ஊக்குவிக்கப்படுகின்றனர்.

“தற்போதுள்ள ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நாளிதழ்களை நேரடியாகவும் பள்ளிகள் வாங்கலாம்” என்று அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்வது மாணவர்களின் தேசிய மொழியின் தேர்ச்சியை மேம்படுத்த உதவும் என்று அமைச்சகம் நம்புகிறது.

– பெர்னாமா


Pengarang :