SELANGOR

இவ்வார இறுதியில் காஜாங்கில் பாடு பதிவிற்கான கவுண்டர் திறந்திருக்கும்

ஷா ஆலம், மார்ச் 20: இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேடன் செலேரா சீமே டூ, சுங்கை சுவா, காஜாங்கில் பாடு பதிவிற்கான கவுண்டர் திறந்திருக்கும்.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பதிவு கவுண்டர் திறந்திருக்கும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சையரெட்சன் ஜோஹான் தெரிவித்தார்.

“விண்ணப்பதாரர்கள் கைப்பேசி, அடையாள அட்டை, வங்கிக் கணக்குத் தகவல், குடும்ப உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்குத் தகவல் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“இத்திட்டம் பாங்கி நாடாளுமன்ற அலுவலகம், சிலாங்கூர் புள்ளியியல் துறை மற்றும் காஜாங் நகராண்மை கழகம் ஆகியவற்றிற்கு இடையிலான கூட்டு முயற்சியாகும்” என்று குவான் சே ஹாங் X பக்கத்தில் கூறினார்.

முன்னதாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள், குறிப்பாகக் குடும்பத் தலைவர்கள், உதவி அல்லது இலக்கு மானியங்களை தவறவிடாமல் இருக்க, பாடு அமைப்பில் உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சிலாங்கூர் புள்ளியியல் துறை இயக்குநர் ஜெனரல் ஹர்தினி யாக்கோப் கூறினார்.

எதிர்காலத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள உதவிகளை விநியோகிக்க எளிதாக இருக்க குடும்பத் தகவல்கள் புதுப்பிப்பது முக்கியம்.

மேலும், www.padu.gov.my என்ற இணையதளத்தின் மூலம் ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை பதிவு செய்யலாம். இது 10 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தை மட்டுமே எடுக்கும் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.


Pengarang :