SELANGOR

துப்புரவு பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 20: கிள்ளான் நகரம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் கிள்ளான் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அதிக செலவு ஏற்படுவதால் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருவதாக நகர துணை மேயர் தெரிவித்தார்.

“துப்புரவு திட்டத்தை செயல்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் உபகரணத் தேவைகளின் அடிப்படையில் உதவி மற்றும் ஒத்துழைப்பையும் கிள்ளான் மாநகராட்சி எப்பொழுதும் வழங்குகிறது” என்று நேற்று அதன் மாதாந்திர கூட்டத்தில் முகமட் சாரி அஃபெண்டி கூறினார்.

கழிவுகளை அகற்றுவதைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக கழிவு தளத்தில் எம்பிடிகே சுற்றுச்சூழல் சேவை துறையால் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“இதுவரை, மொத்தம் 140 குப்பை கொட்டும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 84 முழுமையாக மூடப்பட்டுள்ளன.மீதமுள்ள சுமார் 40 சதவீதம் இந்த ஆண்டு நிறைவடையும் என்று நம்புகிறோம்.

மறுசுழற்சி மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டம் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரத்தில் தொடர்கிறது என்றும் முகமட் ஜாரி அஃபெண்டி தெரிவித்தார்.

“உள்ளூர் மக்களிடையே மறுசுழற்சி முறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் கிள்ளான் சமூகத்திற்காகப் பல்வேறு மறுசுழற்சி நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :