SELANGOR

குப்பை சேகரிப்பு சேவைக்கு i-Clean செயலி மூலம் பதிவு செய்யலாம்

ஷா ஆலம், மார்ச் 22: ஹரி ராயா ஐடில்பித்ரி முன்னிட்டு மொத்தமாக குப்பை சேகரிப்பு சேவையை KDEB Waste Management Sdn Bhd (KDEBWM)  வழங்குகிறது.. இச்சேவைக்கு i-Clean செயலி மூலம் பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு ஆண்டும் இச்சேவைக்கு அதிக தேவை இருப்பதால் மக்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர்  தெரிவித்தார்

“கடந்த ஆண்டு சுபாங் ஜெயாவில் மட்டும் எங்களுக்கு 1,000 கோரிக்கைகள் வந்தன, இந்த ஆண்டு நாங்கள் இச்சேவை மேற்கொள்வோம். ஆனால், கடைசி நிமிடத்தில் பதிவு செய்ய வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் குப்பைகளைப் பிரிப்பதில் ஒழுக்கத்தைப் பேணுமாறு பொதுமக்களைக் கேட்டு கொண்டார்.

மேலும்,விற்று  தீர்ந்து போகாத உணவை கழிவுகளாக, வெளியேற்றுவதை மக்கள் நிறுத்த ஆலோசனை கூறினார்   இந்த புனித மாதத்தில் உணவுகளை வீணாக்க வேண்டாம் மற்றும் குப்பைகளைக் குறைக்க வேண்டும் என்று பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

மொத்தக் கழிவுகளை அகற்றும் சேவைகளுக்கு விண்ணப்பிப்பதுடன், திடக்கழிவு சேகரிப்பு தொடர்பாகப் புகாரளிப்பதையும் கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக்கூடிய I-Clean Selangor செயலி எளிதாக்குகிறது.

கடந்த ஆண்டு, பிசி.காம் விருதுகளின் 23வது பதிப்பில் சிறந்த பொதுச் சேவை விண்ணப்ப விருதை I-Clean Selangor செயலி வென்றது.


Pengarang :