SELANGOR

நான்கு ரம்ஜான் பஜார்களில் 110 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு

ஷா ஆலம், மார்ச் 22: சுபாங் ஜெயா மாநகராட்சி கீழ் உள்ள நான்கு ரம்ஜான் பஜார்களில் கடந்த திங்கட்கிழமை வரை மொத்தம் 110 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது.

பண்டார் கின்றாராவின் ரம்ஜான் பஜாரில் அதிகபட்சமாக 28 கிலோ வசூல் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து USJ 4 (29 கிலோ), தாமான் புஞ்சாக் ஜாலீல் (26 கிலோ) மற்றும் தாமான் பூச்சோங் ப்ரிமா (17 கிலோ) என பதிவாகியுள்ளன என்று எம்பிஎஸ்ஜே கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறை தெரிவித்தது.

“இந்த சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டம் ரம்ஜான் பஜார் நடைபெறும் காலம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுத்தப்படுகிறது.

“பங்கேற்கும் வர்த்தகர்களுக்கு ஒரு கிலோவிற்கு RM3/ ரொக்கமாக வழங்கப்படும் மற்றும் கையிருப்பு இருக்கும் வரை குறைந்தபட்சம் ஒவ்வொரு 10 கிலோ சேகரிப்புக்கும் “ஜெர்ரி கேன்” இலவசமாக வழங்கப்படும்,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

‘கலெக்ட், ஜெனரேட் மற்றும் கேஷ்’ என்ற கருப்பொருளில், இந்த பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டமானது பெட்ரோனாஸ் டாகங்கான் பெர்ஹாட்டின் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வணிகர்களுக்கு இலவச எரிவாயு கேன் பரிமாற்றங்களையும் வழங்குகிறது.

மேலும், USJ 7, டதாரான் பூச்சோங் பெர்மாய், தாமான் பூச்சோங் இண்டா, தாமான் பூச்சோங் உத்தாமா, பண்டார் புக்கிட் பூச்சோங்,தாமான் ஶ்ரீ செர்டாங்  மற்றும் தாமான எகுயின் உள்ளிட்ட ஏழு ரம்ஜான் பஜார்களிலும் சமையல் எண்ணெய் மறுசுழற்சி தொட்டிகள் வழங்கப்படுகின்றன.


Pengarang :