SELANGOR

மெகா எஹ்சான் ஐடில்பித்ரி விற்பனை ஐந்து நாட்கள் நடைபெறும்

ஷா ஆலம், ஏப் 3: இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மெகா எஹ்சான் ஐடில்பித்ரி விற்பனையை கோப்ராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் (கோஹிஜ்ரா) ஏற்பாடு செய்துள்ளது என அதன் பொது மேலாளர் தெரிவித்தார்.

ஐடில்பித்ரியை முன்னிட்டு இந்த சிறப்பு திட்டத்தில் கோழி, எண்ணெய், அரிசி, முட்டை மற்றும் இறைச்சி போன்ற அடிப்படை பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்று முகமது சுக்ரி இஸ்மாயில் கூறினார்.

“உள்ளூர்வாசிகள், குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில், அனைத்து விற்பனை இடங்களுக்கும் ஒவ்வொரு பொருளையும் 500 செட் நாங்கள் கொண்டு வருவோம்.

“இந்த விற்பனையில் காய்கறிகள் மற்றும் ராயா பிஸ்கட் போன்ற ஐடில்பித்ரி பொருட்களும் விற்கப்படும்,” என்று சிலாங்கூர்கினியை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இந்த விற்பனையில் கோழி மற்றும் முட்டை ஒரு தட்டுக்கு 10 ரிங்கிட் விலையிலும், அரிசி 13 ரிங்கிட், 5 கிலோகிராம் சமையல் எண்ணெய் 25 ரிங்கிட் மற்றும் இறைச்சி 35 ரிங்கிட் என விற்கப்படுகிறது.

விற்பனை இடங்கள் மற்றும் நேரம்:

ஏப்ரல் 3 (மாலை 4-7)

சிஜாங்காங் 1வது மைல் 1 சந்தை

 

ஏப்ரல் 4 (மாலை 4 மணி – இரவு 9 மணி)

கோஹிஜ்ரா லாமன் நியாக செக்‌ஷன் 15 ஷா ஆலம்

 

ஏப்ரல் 5 (மாலை 4-7)

ரம்ஜான் சந்தை தளம் 1

 

ஏப்ரல் 6 (காலை 10 மணி – பிற்பகல் 1 மணி)

ருமா சிலாங்கூர் கூ ஆலம் புடிமான்

 

ஏப்ரல் 7 (காலை 10 மணி – பிற்பகல் 1 மணி)

விஸ்மா கோஹிஜ்ரா பெர்ஜயா பார்க் செக்‌ஷன் 32 ஷா ஆலம்


Pengarang :