Foto Sumber: Mingguan Wanita
NATIONAL

மக்கள் உள்ளூர் வெங்காயங்களை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதில் ஃபாமா பங்கு வகிக்கிறது

கோலாலம்பூர், ஏப் 24: நாடு முழுவதும் உள்ள ஃபாமா விற்பனை நிலையங்கள் மூலம்
உள்ளூர் வெங்காய விநியோகத்தை நுகர்வோர் எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதில்
ஃபாமா பங்கு வகிக்கிறது.

விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தால் (கேபிகேஎம்) நிர்ணயம்
செய்யப்பட்ட பகுதிகளில் விளையும் உள்ளூர் வெங்காயத்தை சந்தைப் படுத்துவதை
மையமாகக் கொண்ட திட்டத்தில், மடாணி அக்ரோ விற்பனை, கேபிகேஎம் விற்பனை
நிலையம் மற்றும் அக்ரோபஜார் இணைய போர்டல் விற்பனை உட்பட பல்வேறு
திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 40 ஃபாமா செயல்பாட்டு மையங்களும் அடங்கும்
என ஃபாமா டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஷீட் பஹ்ரி கூறினார்.

"இந்த ஆரம்ப கட்டத்தில், நாடு முழுவதும் 5,000 இடங்களில் நடைபெறும் மடாணி
அக்ரோ விற்பனைத் திட்டத்தை முன்னிட்டு மடாணி கொம்போ விளம்பரம் மூலம்
உள்ளூர் வெங்காய விற்பனைக்கு ஃபாமா இலக்கு வைத்துள்ளது; என்று அவர் இன்று
அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 416 ஃபாமா சந்தைப்படுத்தல் விற்பனை நிலையங்களும், பொருட்களின்
விநியோகத்தைப் பெறுவதை உறுதி செய்யத் தயாராக இருப்பதாகவும், இந்த ஆண்டு
இறுதியில் உள்ளூர் வெங்காயத்தின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் வெங்காயத்தை வளர்ப்பதற்கான கேபிகேஎம்யின் முயற்சிகள் சந்தையில்
வெங்காயத்தின் விநியோகத்தை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில்
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க முடியும் என்று அப்துல் ரஷிட் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :