NATIONAL

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர் மின்னல் தாக்கி மரணம்- மாரானில் சம்பவம்

குவாந்தான், ஏப் 25- இந்தோனேசிய தொழிலாளி ஒருவர் மின்னல் தாக்கி
பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மாரான், பெல்டா ஜெங்கா 14இல்
உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில்
நிகழ்ந்தது.

இந்தோனேசியாவின் லோம்போக்கைச் சேர்ந்த கமாருடின் (வயது 40)
என்ற அந்த ஆடவர் மழையின் போது சக நண்பருடன் பழ மரத்தடியில்
ஒதுங்கியதாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமது
ஜம்ரி முகமது ஜாபேர் கூறினார்.

மழைத் துளிகள் தொடர்ந்து உடலில் பட்டதால் அவரின் நண்பர்
அருகிலுள்ள செம்பனை மரத்தின் கீழ் அடைக்கலம் புகுந்ததாகவும்
அப்போது பலத்தச் சத்தத்துடன் கூடிய பிரகாசமான ஒளி கமாருடின்
தலையைத் தாக்கியதை அவர் கண்டதாகவும் முகமது ஜம்ரி தெரிவித்தார்.

உனடியாக உதவிக்கு விரைந்த நண்பர் கமாருடின் மரத்தடியில்
சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டார் என அவர் அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.

மின்னல் தாக்கியதற்கான அறிகுறி அந்த மரத்தில் காணப்பட்டதோடு
அவ்வாடருக்கு எதிராக கீழறுப்புச் செயல் எதுவும் நிகழ்ந்ததற்கான
அறிகுறி உடலில் காணப்படவில்லை என்றார் அவர்.


Pengarang :