NATIONAL

மேற்கு இந்தியாவில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் வெடி விபத்து- எண்மர் பலி, 60 பேர் காயம்

புதுடில்லி, மே 24- மேற்கு இந்தியாவில் உள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் எண்மர் உயிரிழந்ததுடன் மேலும் 60 பேர் காயமடைந்தனர்.

மும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தானே நகரின் டோம்பிவில் புறநகர்ப் பகுதியிலுள்ள மஹராஷ்ட்ரா தொழிலியல் மேம்பாட்டுக் கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த அமுதன் கெமிக்கல் கம்பெனி என்ற அந்த தொழிற்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பலத்த வெடிப்பின் தாக்கம் காரணமாக அருகில் உள்ள தொழிற்சாலைகளின் கூரைகள் பெயர்ந்ததாக ஊடகங்கள்  தெரிவித்தன.

இந்த விபத்தில் ஆறு ஆடவர்களும் இரு பெண்களும் உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மோசமாக சிதைந்து விட்டன என்று தானே நகராட்சிக் கழகத்தின் பேரிடர் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் யாசின் தட்வி கூறினார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தவர்கள் என்று மாநில தொழிலியல் அமைச்சர் உதய் சமாண்ட் கூறியதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Pengarang :