SELANGOR

செம்புலிங் கலையைக் கற்றுக்கொள்ள பட்டறை ஏற்பாடு – எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், ஜூன் 4: செம்புலிங் கலையைக் கற்றுக் கொள்வதற்காக “இடு கிரியேட்டிவ்“ பட்டறையில் கலந்து கொள்ள சிலாங்கூர் மாநில மலாய் பாரம்பரியக் கழகம் (பாடாட்) பொதுமக்களை அழைக்கிறது.

ஜூன் 8 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெறும் பட்டறைக்கு RM30 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“செம்புலிங் கலையைப் பற்றி மேலும் அறியவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வமுள்ளவர்கள், RM30 கட்டணத்துடன் செம்புலிங் பட்டறையில் பதிவு செய்வோம்.

“இந்த வகுப்பு ஜூன் 8 முதல் ஆகஸ்ட் 24 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

ஷா ஆலம் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுத் துறையின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகம் (UiTM) ஒரு மூலோபாய பங்காளியாக ஒத்துழைப்பை வழங்கியது.

இந்நிகழ்வில் பதிந்து கொள்ள போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். மேலும் தகவலுக்கு 016-333 7141 (அமின் ஃபிக்ரி) தொடர்பு கொள்ளவும் அல்லது https://beacons.ai/padatselangor ஐப் பின்தொடரவும்.


Pengarang :