NATIONAL

ஃபூஜிபிலிம் நிறுவனப் பேராளர்களுடன் பிரதமர் சந்திப்பு- சுகாதாரத் துறையில் முதலீடு குறித்து பேச்சு

கோலாலம்பூர், ஜூன் 5- ஃபூஜிபிலிம் ஹெல்த்கேர் அமெரிக்கஸ் கார்ப்ரேஷன் நிறுவன முதலீட்டாளர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று சந்திப்பு நடத்தினார். மலேசிய சுகாதாரத் துறையில் அந்நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஆதரவு தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதிப்பதை இந்த சந்திப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஃபூஜிபிலிம் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியும் தலைவருமான ஹிடோதோஷி இஸாவா தலைமையிலான பேராளர் குழு பிரதமர் துறையில் தம்முடன் நடத்திய மரியாதை நிமித்தச் சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் கூறினார்.

நாட்டில் குறிப்பாக பொதுச் சேவைத் துறையில் தொழில்நுட்ப உருமாற்றத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு அமைந்தது என்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார்.

நோய் தடுப்பு, நோய் அறிதல் மற்றும் சிகிச்சையை மையமாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்புத் தேவையை ஈடுசெய்யக்கூடிய நோய்க் கண்டறிதல், மற்றும் இமேஜிங் தீர்வுகளை வழங்கக் கூடிய முன்னணி புத்தாக்க நிறுவனமாக ஃபூஜிபிலிம் விளங்குகிறது.


Pengarang :