SELANGOR

தஞ்சோங் சிப்பாட் மற்றும் ஶ்ரீ செர்டாங் தொகுதிகளில் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டம்

ஷா ஆலம், ஜூன் 5: பொதுமக்கள், குறிப்பாக தஞ்சோங் சிப்பாட் மற்றும் ஶ்ரீ செர்டாங் தொகுதிகளில் வசிப்பவர்கள், இவ்வார இறுதியில் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இத்திட்டம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கம்போங் எண்டா கோல்டன் ஜூபிலி மண்டபம், பந்திங் (ஜூன் 8) மற்றும் எம்பிஎஸ்ஜே பல்நோக்கு மண்டபம், ஶ்ரீ கெம்பாங்கன் (ஜூன் 9) ஆகிய இடங்களில் நடைபெறும் என சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

  “உடல், இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் மற்றும் பிறவற்றிற்கான இலவசச் சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.”செலங்கா

“பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 1800 226 600 என்ற எண்ணில் “Selcare“ ஐ தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் பட்ஜெட் 2024இல், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இலவச மருத்துவ பரிசோதனையை திட்டத்தைத் தொடர RM3.2 மில்லியன் ஒதுக்குவதாக அறிவித்தார்.


Pengarang :