NATIONAL

பெர்லிஸ் வழியாகக் கொண்டு வரப்பட்ட இஸ்ரேலிய கொள்கலனுக்கு மலேசியா தடை

கங்கார், ஜூன் 5 – அண்டை நாட்டில் இருந்து கொள்கலனை ஏற்றிக் கொண்டு பாடாங் புசார் வழியாக  வந்த  இஸ்ரேலை தளமாகக் கொண்ட கப்பல் நிறுவனத்தின் சின்னத்தைக்  கொண்ட டிரெய்லரை நாட்டிற்குள் நுழைவதிலிருந்து  பெர்லிஸ் சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது.

அந்த கொள்கலன் உறைந்த கோழிகளை ஏற்றிச் வந்ததாக மாநில  சுங்கத் துறை இயக்குநர்  இஸ்மாயில் ஹாஷிம் தெரிவித்தார்.

அந்த கொள்கலனில் ஸிம் சின்னம் இருப்பதை ஸ்கேனர் கருவியின்  இயக்குநர் கண்டறிந்தார். உறுதிப் படுத்தல் மற்றும் மேல் ஆய்வுக்காக அந்த டிரெய்லர்  தடுத்து வைக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஸிம் சின்னம் கொண்ட கொள்கலன்கள் மலேசியாவுக்குள் நுழைவது தடைசெய்யப் பட்டிருப்பதை  அரசு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து  தாங்கள் உறுதிப் படுத்திக்கொண்டதாக இஸ்மாயில் கூறினார்.

அண்டை நாட்டிற்கு திரும்புமாறு அந்த கொள்கலன் லோரிக்கு அன்றைய தினமே  அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :