NATIONAL

மேம்பாலத்தின் கட்டமைப்பில் அமர்ந்திருந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்

கோலாலம்பூர், ஜூன் 10: கடந்த வெள்ளிக்கிழமை புலத்தான் பகாங் மேம்பாலத்தின் கட்டமைப்பில் அமர்ந்திருந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது.

1 நிமிடம் 14 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மேம்பாலத்தின் கீழ் இயந்திரங்களுடன் தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்களைத் தவிர, பொது மக்களும் அப்பெண்ணை வெற்றிகரமாக மீட்க உதவியதை காட்டுகிறது.

பிற்பகல் 3.15 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக வங்சா மாஜு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் லாசிம் இஸ்மாயில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“இந்த சம்பவம்  தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை மற்றும் இது தற்கொலை முயற்சி வழக்கு அல்ல. அப்பெண் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது மற்றும் மேல் சிகிச்சைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என்று முகமட் லாசிம் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :