NATIONAL

பிலிப்பைன்ஸ் நாட்டுடனான அரச தந்திர உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும்- மலேசியா நம்பிக்கை

கோலாலம்பூர், ஜூன் 13- மலேசியாவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும்
இடையிலான அரசதந்திர உறவுகள் இரு நாட்டு அரசுகள் மற்றும்
மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தொடர்ந்து வலுப்பெற்று உயர்ந்த
நிலையை எட்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகப் பொதுப்பணித் துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

பிலிப்பைன்சின் 126வது சுதந்திர தினம் மற்றும் மலேசிய-பிலிப்பைன்ஸ்
உறவின் 60வது நிறைவைக் குறிக்கும் வகையிலான கொண்டாட்ட
நிகழ்வில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட போது அவர்
இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவுக்கான பிலிப்பைன்ஸ் குடியரசின் அரச தந்திரி மரியா ஏஞ்சலா
ஏ. பொன்ஸ் எனக்கு சிறப்பான வரவேற்பை நல்கினார். இந்த உன்னத
நிகழ்வைக் சிறப்பிக்க பெரும்பாலான ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள்
ஒன்று கூடியுள்ளனர். இவ்விரு நாடுகளும் வளமிக்க மற்றும் வரலாற்று
பன்முகத் தன்மையும் கலாசாரமும் கொண்டவையாக விளங்குவதை இது
பறைசாற்றுகிறது என்றார் அவர்.

இந்த மறக்க முடியாத நிகழ்வில் மலேசிய அரசாங்கமும் கலந்து கொள்ள
வாய்ப்பளித்த தற்கு நன்றி. பிலிப்பைன்ஸ் மக்களுக்கு சுதந்திர தின
வாழ்த்துகள் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
அவர் கூறியுள்ளார்.


Pengarang :