NATIONAL

ஜெய்ன் ராய்யான் பெற்றோர் மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்- வழக்கறிஞர் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13- படுகொலை செய்யப்பட்ட சிறுவனான
ஜெய்ன் ரய்யான் பெற்றோர்களுக்கு எதிராக இன்று பெட்டாலிங் ஜெயா
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

அந்த சிறுவனின் தந்தையைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஃபாஹ்மி
அப்துல் மோயின் பெர்னாமாவிடம் இதனை உறுதிப்படுத்தினார்.

அந்த தம்பதியர் மீது இன்று குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்பதை
மட்டும் என்னால் கூறமுடியும். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
குறித்து என்னால் எதையும் வெளிப்படுத்த முடியாது. இதன் தொடர்பில்
துணை பப்ளிக் புரோசிகியூட்டரை நான் முதலில் சந்திக்க வேண்டும்
ஃபாஹ்மி சொன்னார்.

இன்று காலை 8.00 மணி முதல் நிருபர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவியத்
தொடங்கினர். பாதுகாவலர்கள் அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
அந்த தம்பதியரின் உறவினர்கள் என நம்பப்படும் சிலர் நீதிமன்ற
வளாகத்தில் காணப்பட்டனர்.

கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி டாமன்சாரா டாமாய், இடமான்
அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலுள்ள நீரோடை ஓரம் ஜெய்ன் ராய்யான்
உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த ஆறு வயதுச் சிறுவன் காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்ட
ஒரு தினத்திற்குப் பிறகு அவனது உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.
அச்சிறுவன் படுகொலை செய்யப்பட்டது சவப்பரிசோதனையில் தெரிய
வந்ததோடு தன்னைத் தற்காத்துக கொள்ளப் போராடியதற்கான
அறிகுறியாக அவனது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டன.


Pengarang :