NATIONAL

ஸ்மார்ட் சேவா என்னும் வாடகை வீட்டை  சொந்தமாக்கிக் கொள்ளும் திட்டத்தில் கீழ் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள்

ஷா ஆலம், ஜூன் 13: இளம் தம்பதிகளுக்கு உதவும் முயற்சியாக ஸ்மார்ட் சேவா திட்டத்தில்  கீழ் 3,000க்கும் மேற்பட்ட சிலாங்கூர் கூ வீடுகள் 2026 க்குள் கட்டப்படும்.

இந்த திட்டமானது, சிலாங்கூர் மாநில மக்கள் தங்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு நிர்வாக உத்தி ஆகும் என்றும் வீட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“இந்தத் திட்டத்தின் மூலம், புதுமணத் தம்பதிகள் நியாயமான விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு இவ்வீடுகளில் வாடகைக்கு தங்கலாம். இது அவர்களுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவுகிறது.

“அந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர்களின் வாடகைப் பணத்தில் 30 சதவிகிதம் வீடு வாங்க முன்பணமாக பயன்படுத்தப்படும்” என்று போர்ஹான் அமன் ஷா கூறினார்.

ஸ்மார்ட் சேவா திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்கள் தங்கள் சொந்த வீட்டை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

அதிகபட்சமாக ஐந்து வருட வாடகைக் காலத்துடன், செலுத்தப்பட்ட மொத்த வாடகையில் 30 சதவிகிதம் வருமானமாக வாடகைதாரர்களுக்கு வழங்கப்படும்.

2025 ஆம் ஆண்டளவில், சிலாங்கூர் அரசாங்கம் சிலாங்கூர் கூ ரூமா 3.0 வீட்டுக் கொள்கையின் மூலம் 60,000 குடியிருப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Pengarang :