NATIONAL

பெட்டாலிங் ஜெயா, கிள்ளானில் மதிப்பீட்டு வரி மறுஆய்வு

ஷா ஆலம், ஜூன் 14 – உத்தேச கிரேட்டர் கிளாங் வேலி பெருநகர
திட்டத்தில் இடம் பெற்றுள்ள இரு ஊராட்சி மன்றங்களான பெட்டாலிங்
ஜெயா மாநகர் மன்றமும் (எம்.பி.பி.ஜே.) கிள்ளான் அரச மாநகர் மன்றமும்
(எம்.பி.டி.கே.) தங்களின் மதிப்பீட்டு வரியை கடந்த 30 ஆண்டுகளாக மறு
ஆய்வு செய்யவில்லை.

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி விதிக்கப்படவிருக்கும் புதிய
மதிப்பீட்டு வரி தொடர்பான அறிக்கையை அவ்விரு ஊராட்சி
மன்றங்களும் அண்மையில் வெளியிட்டன.

இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு
தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆட்சேபத்தை முன்வைப்பதற்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்
ஜூலை 4ஆம் தேதி வரையிலும கிள்ளான் அரச மாநகர் மன்றம் 16ஆம்
தேதி வரையிலும் அவகாசம் வழங்கியுள்ளன.

இந்த இரு ஊராட்சி மன்றங்களோடு மாநிலத்திலுள்ள இதர எட்டு ஊராட்சி
மன்றங்களும் கடந்த 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை
உயர்த்தவில்லை.

உதாரணத்திற்கு காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985)
மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக்
கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32
ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே
ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல்
அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும்
செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக
வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்வர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா
நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18
ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு இந்த
மதிப்பீட்டு வரி மறு ஆய்வு மிக முக்கியம் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 30ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :