NATIONAL

சிங்கப்பூரில் கப்பல் துப்புரவுப் பணியின் போது விபத்து- மலேசிய ஊழியர் மரணம்

சிங்கப்பூர், ஜூன் 20- இங்குள்ள மரினா சவுத் பியர், ஈஸ்டர்ன் ஏங்கரேஜ் பகுதியில் கப்பலில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த 22 வயது மலேசிய பணியாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில முக்குளிப்பாளர்களுக்கு உதவியாக வந்த படகின்  காற்றாடியில் அந்த பணியாளர் சிக்கிக் கொண்டதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சு கூறியது.

காயமுற்ற அந்த ஊழியர் உடனடியாக சிங்கப்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். கடுமையான காயங்கள்  காரணமாக அவர் உயிரிழந்தார் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சின் பேச்சாளர்  தெரிவித்தார்.

வர்த்தக ரீதியிலான முக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம் பணியின் போது முக்குளிப்பாளர்களுக்கும் மேலாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் தொடர்பும் சீராக இருப்பதை உறுதி செய்ய இயலும். இத்தகைய பணியின் போது ஸ்குபா பொழுதுபோக்கு முக்குளிப்பு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்றார் அவர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடக்கியுள்ளதாகவும் இச்சம்பவத்தில் சூது நிகழவில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சி.என்.ஏ. செய்தி நிறுவனம் கூறியது.


Pengarang :