NATIONAL

சக நாட்டைச் சேர்ந்தவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

ஜோர்ஜ் டவுன், ஜூன் 24: கடந்த வெள்ளியன்று, சக நாட்டைச் சேர்ந்த ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பான விசாரணையில் ஐந்து வங்காளதேச ஆண்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பொதுத் தகவல் மற்றும் உளவுத்துறை மூலம் ஷா ஆலமில் நடந்த சோதனையில் 20 முதல் 35 வயதுடைய அனைவரும் கைது செய்யப்பட்டதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துட் ஹமிட் தெரிவித்தார்.

“வெள்ளிக்கிழமை, இந்த நகரத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் 50 வயதுடைய ஒருவரிடமிருந்து, ‘’கடத்தப்பட்ட தன் மகன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், 200,000 ரிங்கிட் பிணை பணம் வேண்டும்’’ என கேட்டு, ஒரு  சந்தேக நபரிடமிருந்து  தொலைபேசி அழைப்பை பெற்றதாக துப்புரவு பணியாளர் ஒருவர் புகார் அளித்தார்..

“தனது மகனின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட அந்நபர், அழைப்பைப் பெற்றவுடன் காவல்துறையில் புகார் அளித்தார்,” என்று ரஸ்லாம் கூறினார்.

அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில், காவல்துறையினர் ஷா ஆலமில் உள்ள ஒரு வளாகத்தை சோதனை செய்தனர். அங்கு அந்த ஐந்து பேரையும் கைது செய்து பாதிக்கப்பட்டவரை மீட்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட 20 வயதுடையவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், வேலை தேடுவதற்காக இந்நாட்டிற்கு வந்திருப்பதாக நம்பப்படுவதாகவும் ரஸ்லாம் கூறினார்.

“முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்புரவுத் தொழிலாளிக்கு தனது மகன் மலேசியா வந்திருப்பது தெரியாது என்றும், சந்தேக நபரிடம் இருந்து பணம் கோரும் தொலைபேசி அழைப்பை பெற்ற பின்னரே தெரிந்தது” என்றும் அவர் கூறினார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 365 இன் கீழ் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அந்த ஐந்து பேரும் இப்போது நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் வேறு சந்தேக நபர்களுக்கும் அல்லது வெளிநாட்டவர்களை கடத்தும் சிண்டிகேட்டிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

– பெர்னாமா


Pengarang :