NATIONAL

புதிய கல்வித் திட்டம் – ஆலோசனைகளை வழங்க பொது மக்களுக்கு கல்வியமைச்சு அழைப்பு

புத்ராஜெயா, ஜூன் 24 –  முடிவடையும் நிலையில் உள்ள 2013-2025  மலேசியக் கல்வித் திட்டத்திற்கு (எம்.இ.பி.) மாற்றாகப் புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதில்  ஆலோசனைகளை வழங்குமாறு  பொது மக்களைக் கல்வியமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

முழு சமூக அணுகுமுறைக்கு ஏற்ப விரிவான மற்றும் முழுமையான எதிர்காலக் கல்வித் திட்டத்தை உருவாக்க உதவும் வகையில் பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள் குறிப்புகள் அல்லது முன்மொழிவுகள் எழுத்து வடிவில் வரவேற்கப் படுகின்றன என்று அமைச்சு இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மலேசியக் கல்வியின் எதிர்காலம் 2026-2036 குறித்து கருத்துகளைப் சேகரிப்பதற்காக அகப்பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கானப் பரிந்துரைகளை  இவ்வாண்டு மே 14 முதல் டிசம்பர் 31 வரை  சமர்ப்பிக்கலாம் என்று கல்வியமைச்சு கூறியது.

பொதுமக்கள்  www.moe.gov.my/pelanpendidikan2026/public அகப்பக்கம் வாயிலாக தங்கள் கருத்துகளைப் பதிவிடலாம்.


Pengarang :