NATIONAL

சிலாங்கூர் எஃப்சி கூட்டு ஒற்றுமை நிதி அறிமுகம்

ஷா ஆலம், ஜூன் 27: இன்று இரவு முதல் ஜூலை 2 வரை சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலுடன் (MSNS) இணைந்து சிலாங்கூர் எஃப்சி கூட்டு ஒற்றுமை நிதியை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது.

நேற்று மலேசிய கால்பந்து லீக் (MFL),  சிலாங்கூரின்  ரெட் ஜெயண்ட் அணிக்கு வழங்கிய அபராதம் நியாயமற்றது, அந்த முடிவைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப் பட்டதாக விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

கால்பந்து ரசிகர்கள் சிலாங்கூர் எஃப்சிக்கு குறைந்தது RM1 நன்கொடை வழங்கி தங்கள் ஆதரவைக் காட்டலாம் என நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

“இந்த நன்கொடையின் மூலம் கிடைக்கும் தொகை சிலாங்கூர் எஃப்சியிடம் ஒப்படைக்கப்படும். இது மலேசிய கால்பந்து லீக்கால் வழங்கப்பட்ட கடுமையான தண்டனைக்கு எதிராக மிக உயர்ந்த மட்டத்தில் நீதிக்காக போராட அவர்களுக்கு உதவும்.

“இந்த முயற்சியின் மூலம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் கால்பந்து விளையாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் திரட்ட முடியும்“, என்று நம்பப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நிதியளிக்க விரும்புவோர் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை அனுப்பலாம் என்றும் அவர் கூறினார்.

மே 10 அன்று, சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் ஜோகூர் டாருல் தாசிமுக்கு (ஜேடிடி) எதிராக சும்பங்சிஹ் கோப்பை ஆட்டத்தில் விளையாடாததற்காக ரெட் ஜெயண்ட்ஸ் அணிக்கு, சூப்பர் லீக் போட்டியில் மூன்று புள்ளிகள் கழிப்புடன் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டது என மலேசிய கால்பந்து லீக் நேற்று தெரிவித்தது. அக்குற்றத்திற்காக சிலாங்கூர் எஃப்சிக்கு, ஜேடிடிக்கான இழப்பீடு அபராதமாக RM100,000 விதிக்கப்பட்டது.

சிலாங்கூர் எஃப்சியை அதிகமாக தண்டித்ததற்காக மலேசிய கால்பந்து லீக் மீது சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கோபமடைந்துள்ளார்.

அவர் அச்செயலை அபத்தமானது என்று வர்ணித்தார். அதுமட்டுமில்லாமல், வழங்கப்பட்ட தண்டனை மரியாதை இல்லாமல், பொறுப்பற்ற தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும் என அவர் கருதினார்.

மேலும், 1995 முதல் 2013 வரை சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சங்கத்தின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமீன் அவர்களும் இந்த செயலுக்கு குரல் கொடுக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது என சுல்தான் ஷராபுடின் கூறினார்.

இதற்கிடையில், இந்த தண்டனையால்  சிலாங்கூர் அணி ஆதரவாளர்கள்  கோபமும் ஏமாற்றமும் அடைய தூண்டியது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சில மாநிலப் பிரதிநிதிகளும் அடுத்த மாதம் தங்களது சம்பளத்தில் பாதியை சிலாங்கூர் எஃப்சிக்கு வழங்க தயாராக உள்ளனர்.


Pengarang :