NATIONAL

எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளின் செயல்பாடு நிறுத்தப்படும்

கெய்ரோ, ஜூலை 1: காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் 48 மணி நேரத்திற்குள் மூடப்படும் என்று அப்பகுதியின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

“ஜெனரேட்டர்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் தீர்ந்து விட்டதால், இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் நிலையங்கள் 48 மணி நேரத்திற்குள் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்று சுகாதார அமைச்சகம் மீண்டும் எச்சரித்துள்ளது” என்று டெலிகிராமில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் உடனடியாகத் தலையிட்டு எரிபொருள் மற்றும் ஜெனரேட்டர்களை வழங்குவதற்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

– பெர்னாமா-ஸ்புட்னிக்


Pengarang :