NATIONAL

மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசம்

ஷா ஆலாம், ஜூலை 1- அனைத்து தரப்பினருக்கும் நீதி வழங்கும் வகையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீன்பிடி சட்டத்தில் விரிவான திருத்தம் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது.

பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக  அமலில் இருந்து வரும்  இச்சட்டத்தில்  திருத்தம் செய்ய வேண்டியுள்ளது  என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீன்பிடி சட்டத்தில் முழுமையாகத் திருத்தம் கொண்டு வருவோம். இந்த சட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

அனைத்தும் சிறிய மீனவர்கள் மற்றும் பெரிய இழுவை படகுகள், பெரிய படகுகள் மற்றும் மீன்பிடி பகுதிகள் ஆகியவற்றை இது  உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.

மக்களவையில் இன்று  மீன்பிடி உரிம நிபந்தனைகளை மறுஆய்வு செய்வது குறித்து கோல கெடா தொகுதி பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர்  டாக்டர் அகமது பாக்ருடின்  ஃபக்ருதீன் ஃபக்ருராஸி எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளிக்கையில்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது, அனைத்து மீன்பிடி நடவடிக்கைகளும் 1985ஆம் ஆண்டு மீன்பிடி சட்டம்  மற்றும்  1971ஆம் ஆண்டு மீனவர் சங்க சட்டம்  ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளன. ஆகக் கடைசியாக  கடந்த  2008 ஜனவரி 1ஆம் தேதி  மீனவர் சங்க சட்டம் திருத்தப்பட்டது.

இதற்கிடையில், மீனவர்கள் கடும் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க அமைச்சு தொடர்ந்து  முயற்சி செய்து வருவதாக முகமது சாபு  கூறினார்.

மீனவர்களின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த பல பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :