SELANGOR

விலங்குகளுக்கான உரிமத்திற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

ஷா ஆலம், ஜூலை 3: தங்கள் விலங்குகளுக்கு உரிமம் எடுக்க விரும்பும் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் (எம்.டி.எஸ்.பி) வழங்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடியை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தச் சலுகை ஜூலை 15ஆம் தேதி வரை முதல் 100 நாய்களுக்கு வழங்கப்படும் என்று ஊராட்சி மன்றம் முகநூலில் மூலம் தெரிவித்துள்ளது.

“நாய் உரிமையாளர்கள் மூன்று வருட காலத்திற்கு ஒரு நாய்க்கு RM15 மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் செலுத்தப்படும் ஒவ்வொரு உரிமத்திற்கும் ஒரு சிறப்பு பதிப்பு டி-ஷர்ட் நினைவு பரிசாக வழங்கப்படும்.

இந்த சலுகையைப் பெற உரிமையாளரின் அடையாள அட்டை நகல் மற்றும் உரிமம் பெறும் நாயின் புகைப்படத்துடன் எம்.டி.எஸ்.பி உரிமம் வழங்கும் துறைக்கு வர வேண்டும்,”.

கடந்த சனிக்கிழமை, #luvyourpet நிகழ்ச்சியை ஜாலான் பாகன், சுங்கை பெசார், கூடைப்பந்து மைதானத்தில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் எம்.டி.எஸ்.பி ஏற்பாடு செய்தது.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவ சேவைத் துறையின் விலங்குகள் நலப் பேச்சுக்களுடன், நாய்கள் மற்றும் பூனைகளுக்கான தடுப்பூசி கவுன்டர்கள், உரிமம், ஆலோசனைகள் மற்றும் சுகாதார சோதனைகள் ஆகியவையும் இடபெற்றன.

இதற்கிடையில், சுங்கை பெசார் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அசார் அச்சில் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், விலங்குகளின் அவலநிலையைப் பற்றி அக்கறை கொண்ட எம்.டி.எஸ்.பியின் முயற்சியைப் பாராட்டினார்.

“அனைத்து தரப்பினரும், குறிப்பாக நாய் அல்லது பூனை உரிமையாளர்கள், அவற்றின் நலனைக் கவனித்துக்கொள்வதன் மூலம் தங்கள் செல்லப்பிராணிகளை அதிக பொறுப்புள்ள உரிமையாளர்களாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“பொது இடங்களில் நாய்களையோ பூனைகளையோ அவர்கள் விட்டுவிட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. இது தொல்லையாக மாறும் மற்றும் இறுதியில் உள்ளூர் அதிகாரிகளுக்கும் சமூகத்திற்கும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :