NATIONAL

சிலாங்கூரில் கடந்தாண்டு 11.2 லட்சம் மரங்கள் நடப்பட்டன- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 4 – ஊராட்சி மன்றங்களின் முன்னெடுப்பின் வாயிலாக
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கடந்தாண்டு 11 லட்சத்து 20 ஆயிரம்
மரங்கள் நடப்பட்டன.

கிள்ளான் அரச மாநகர் மன்றம் மிக அதிகமாக அதாவது 500,000
மரங்களையும் அதற்கு அடுத்த நிலையில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம்
305,645 மரங்களையும் நட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 178,175
மரங்களையும் கோல லங்காட் நகராண்மைக் கழகம் 152,281 மரங்களையும்
ஷா ஆலம் மாநகர் மன்றம் 117,041 மரங்களையும் நடவு செய்துள்ளதாக
அவர் தெரிவித்தார்.

இந்த நிலவடிவமைப்பு மர நடவுத் திட்டத்திற்காக அனைத்து ஊராட்சி
மன்றங்களும் செலவிட்டத் தொகை 2 கோடியே 66 லட்சம் வெள்ளியாகும்
என மாநில சட்டமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நிலவடிவமைப்பு திட்டப்
பகுதிகளில் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை குறித்து செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் ஜமாலியா
இவ்வாறு கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலாவது மலேசியத்
திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முதன்மை இலக்குகளில் காடுகள்
மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒன்றாக விளங்குகிறது.


Pengarang :