NATIONAL

ஸ்கிம் ஊசிய எமாஸ் திட்ட உதவியை டிஜிட்டல் முறையில் விநியோகிக்க எண்ணம்

ஷா ஆலம், ஜூலை 11: ஸ்கிம் ஊசிய எமாஸ் திட்ட (SMUE) உதவியை டிஜிட்டல் முறையில் மிகவும் திறம்பட விநியோகிப்பதற்கான ஒரு சுமூகமான செயல்முறையை உறுதிசெய்ய மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்த புதிய முறை குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தை (IT) பயன்படுத்துவதில் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி விளக்கினார்.

“டிஜிட்டலைசேஷன் நடைமுறைப்படுத்துவது இணையப் பதிவு மற்றும் உதவியைப் பெறுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இது சமூக சேவை மையங்களின் சுமையைக் குறைக்கும்,” என்று அவர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் நூருல் சியாஸ்வானி நோவின் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த ஆண்டு மொத்தம் 263,141 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். அதே நேரத்தில் 6,331 குடும்பங்கள் இறப்பு பலனைப் பெற்றனர்.

“பொதுக் காப்பீட்டுத் திட்டம் (இன்சான்) மற்றும் இல்திசம் சிலாங்கூர் சிஹாத் திட்டம் (ISS) போன்ற பிற சலுகைகள் இருப்பதால் மரண உதவி தொகை RM500ஆக உள்ளது.

“இந்த உதவி தொகை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்றால் அனைத்தும் செம்மைப் படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஸ்கிம் ஊசிய எமாஸ் திட்டத்தின் ஒரு பகுதியான ஜோம் ஷாப்பிங் திட்டத்திற்காகச் சிலாங்கூர் பட்ஜெட்டில் RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், ஒவ்வொரு நபரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க RM200 பெறுகிறார்கள்.


Pengarang :