NATIONAL

சுற்றுலா துறையை மேம்படுத்த ஏர் ஏசியாவுடன் மாநில அரசு கூட்டு

ஷா ஆலம், ஜூலை 13: 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு சுற்றுலா துறையை மேம்படுத்த ஏர் ஏசியாவுடன் மாநில அரசு கூட்டு சேர உள்ளது.

இந்த ஒத்துழைப்பு மூலம் எதிர்வரும் செப்டம்பரில் 15 ஏர் ஏசியா விமானங்களில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுவதாகச் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.

“2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு சர்வதேச அளவில் சிலாங்கூர் முழுவதும் உள்ள சுவாரஸ்யமான இடங்களை விளம்பரப் படுத்துவதற்கான மாநில அரசின் திட்டங்களின் ஒரு பகுதியாக இது உள்ளது.

“இந்த நடவடிக்கையின் மூலம் சிலாங்கூர் எட்டு மில்லியன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடுத்த ஆண்டு எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“இந்த ஆண்டு மட்டும் நாங்கள் ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளோம். முதல் காலாண்டில் 1.78 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடிந்தது. சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா மற்றும் ஜப்பானைத் தொடர்ந்து சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்,” என்று அவர் கூறினார்.

இந்த பிரச்சாரம் எதிர்வரும் நவம்பரில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுயி லிம் கூறினார்.


Pengarang :