NATIONAL

இஸ்ரேலின் தாக்குதலில் 9,241 பாலஸ்தீன மாணவர்கள் பலி- 15,000 பேர் காயம்

காஸா, ஜூலை 17- கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா
தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் 9,241
மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 15,182 பேர்
காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதல்களில் காஸா தீபகற்பத்தில் 9,318
மாணவர்கள் கொல்லப்பட்டு 14,671 பேர் காயமடைந்த வேளையில் மேற்கு
கரையில் மரண எண்ணிக்கை 103ஆகவும் காயமடைந்தவர்கள்
எண்ணிக்கை 505ஆகவும் பதிவாகியுள்ளதாகப் பாலஸ்தீன செய்தி
நிறுவனமான வாஃபா கூறியது.

மேலும், மேற்கு கரையில் 357 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
பாலஸ்தீன கல்வி மற்றும் உயர்கல்வியமைச்சை மேற்கோள் காட்டி அது
செய்தி வெளியிட்டுள்ளது.

அக்காலக்கட்டத்தில் காஸா தீபகற்பம் மற்றும் மேற்கு கரையில்
ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியளர்கள் உள்ளிட்ட 497 பேர்
உயிரிழந்த நிலையில் மேலும் 3,426 பேர் காயமடைந்தனர்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான 353 பள்ளிகள் மற்றும் உயர்கல்விக்
கூடங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி
நிறுவனத்தின் 65 கல்விக் கூடங்களும் குண்டு வீச்சுத் தாக்குதலில்
கடுமையாகச் சேதமடைந்தன.

மேற்கு கரையிலுள்ள 69 பள்ளிகளும் ஐந்து உயர்கல்விக் கூடங்களும்
இராணுவத் தாக்குதலில் மோசமாக சேதமடைந்தன.

இது தவிர, மேலும் காஸாவில் உள்ள 133 அரசாங்கப் பள்ளிகள் தற்போது
போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கான மையங்களாகச் செயல்பட்டு
வருகின்றன.


Pengarang :