SELANGOR

காஜாங் சுகாதாரக் கிளினிக்கில் பார்க்கிங் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு

உலு லங்காட், ஜூலை 17: காஜாங் சுகாதாரக் கிளினிக்கிற்கு வருகை புரிபவர்கள் எதிர்கொள்ளும் பார்க்கிங் பற்றாக்குறை பிரச்சனைக்கு புதிய வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தன் மூலம் தீர்வு காணப்பட்டது.

காஜாங் சுகாதாரக் கிளினிக்கிற்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 154 வாகன நிறுத்துமிடங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நடவடிக்கை வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எளிதாக இருக்கும் என காஜாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் சியோங் கியான் யங் கூறினார்.

“இந்த பிரச்சனை கடந்த மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது குடியிருப்பாளர்கள் எழுப்பப்பட்டது. வருகையாளர்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பார்க்கிங் இல்லாததால் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது.

“எனக்கு மக்கள் ஆணை கிடைத்ததும், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பைச் செய்ய விரும்பும் டெவலப்பர்கள் உட்பட பல தரப்பினரை நான் சந்தித்தேன். மேலும் சிலர் உதவ ஒப்புக்கொண்டனர்.

“இந்த திட்டத்தை செயல்படுத்த சில மாதங்கள் மட்டுமே ஆனது, இப்போது அங்கு 204 பார்க்கிங் இடங்கள் உள்ளன. முன்பு 50 இடங்கள் மட்டுமே இருந்தன,” என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :