SELANGOR

பணிபுரியும் தாய்மார்களுக்கு RM1,000 ரொக்கம் வழங்கும் மாமாகெர்ஜா திட்டம்

ஷா ஆலம், ஜூலை 17: சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்களுக்கு RM1,000 ரொக்கம் வழங்கும் மாமாகெர்ஜா திட்டம் 5,000 பெறுநர்களின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் திறக்கப்பட்டுள்ளது.

மே மாத நிலவரப்படி மொத்தம் 4,042 பணிபுரியும் தாய்மார்கள் குழந்தைப் பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் இந்த உதவியைப் பெற்றுள்ளனர். இது பெண்களை வேலைவாய்ப்புத் துறையில் தொடர்ந்து இருப்பதற்கு ஊக்குவிப்பதாகப் பெண்கள் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.

“முன்னதாக, மாமாகெர்ஜா திட்டம் மொத்தம் 6,094 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் மொத்தம் 4,042 பேர் வெற்றிகரமாகப் பண உதவியைப் பெற்றனர், அதாவது பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது, அதே நேரத்தில் 2,052 விண்ணப்பங்கள் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டன.

“இன்னும் 900க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உதவி வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க பணிபுரியும் தாய்மார்களை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

செலாங்கா செயலி அல்லது mamakerja.selangkah.my இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் செய்யலாம். எந்தவொரு தகவலையும் Selcare ஹாட்லைன் 1-800-22-6600க்கு அல்லது [email protected] மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.

RM5 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்தத் திட்டம், RM8,000க்கு மிகாமல் குடும்ப வருமானத்துடன் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட 5,000 பணிபுரியும் பெண்களுக்குப் பயனளிக்கிறது.

பிற தகுதித் தேவைகள் பின்வருமாறு:

  • வேலை மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள்

  • சிலாங்கூர் குடிமகன் (சிலாங்கூரில் பிறந்த  அல்லது 10 ஆண்டுக்கு மேல் இங்கு வசிப்பவர்களாக இருக்க வேண்டும்).

  • சிலாங்கூரின் வாக்காளராக இருத்தல்

  • குடும்ப வருமானம் RM8,000 மற்றும் அதற்கும் குறைவக இருத்தல்

     – உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) கணக்கு அல்லது சேமநிதி

     (EPF) பங்களிப்பு உள்ள நபர்கள்

– அசோ பிந்தார், பிங்காஸ் மற்றும் துனாஸ் ஆகிய உதவிகளைப் பெறாதவர்களாக இருக்க வேண்டும்  என கூறுகிறது


Pengarang :