SELANGOR

நாளை மேலும் 4 இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூலை 17: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் 4 இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

நாளை மார்கஸ் பாசுகான் சிம்பனான் பெர்செக்குத்துவான் பொது மண்டபத்தில் (டூசுன் துவா), மஸ்ஜிட் அல்பக்ரி வாகனம் நிறுத்தும் இடம், பிக்கிட் நாகா செக்‌ஷன் 32 ( கோத்தா கெமுனிங்), சூராவ் கைரியா, தாமான் மஸ்னா இரவு சந்தை வளாகம் (செந்தோசா) மற்றும் கெஎம்எஸ்டி பல்நோக்கு மண்டபம் (கோத்தா டாமன்சாரா) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :