NATIONAL

விவசாய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளை மேம்படுத்த பிலிப்பைன்ஸூடன் ஒப்பந்தம்

கோலாலம்பூர், ஜூலை 18: விவசாய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க பிலிப்பைன்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (LOI) கையெழுத்திட மலேசியா தயாராக உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

மலேசியாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் மரியா ஏஞ்சலா அப்ரேரா போன்ஸுடன் விவசாயிகள் அமைப்பு வாரியக் கோபுரத்தில் நடந்த சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மலேசியாவுடனான விவசாய ஒத்துழைப்பை வலுப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் அவர் (மரியா ஏஞ்சலா) நியமிக்கப்பட்டார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் ஆசியாவில் பிலிப்பைன்ஸ் விவசாயத் துறைக்கு நமது நாடு மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.

நவம்பர் 2023 இன் இறுதியில் மரியா ஏஞ்சலா மலேசியாவில் சேவை செய்யத் தொடங்கிய பிறகு இந்த சந்திப்பு முதல் முறையாக நடைபெற்றது என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :