SELANGOR

சிலாங்கூரில் முதலீடு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 21: முதலீட்டாளரளுடன் இம்மாநில நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் சிலாங்கூரில் முதலீடு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதாக முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கு வாகனப் பாகங்களை இணைக்கும் தொழிற்சாலை ஒன்றை “Chery
Auto Malaysia“ திறந்ததன் மூலம் இக்கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது என இங் சீ ஹான்
தெரிவித்தார்.

எனவே, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில்
மாநில அரசு தொடர்ந்து உறுதியுடன் இருக்கும். அவற்றில் செமிகொண்டாக்டர் போன்ற
முக்கிய துறைகளை நாங்கள் அதிகரிப்போம்.
அதே நேரத்தில் தானியங்கு உற்பத்தி போன்ற மேம்பட்ட தொழில்களுக்கான
வழியையும் வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்குவோம், என்று அவர்
சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஷா ஆலமில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பது உட்பட, கடந்த ஆண்டு முதல் “Chery
Auto Malaysia“ இந்நாட்டில் RM1 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக
`Chery Automobile Co Ltd` இன் தலைவர் இன் தொங்யூ தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்திப் பகுதிக்கு அருகில் இயங்கும் இத்தொழிற்சாலையானது, நாடு
முழுவதும் வாகனப் பிராண்டின் விற்பனை, சேவை மற்றும் உதிரி பாகங்கள்
மையங்களில் கூடுதலாக 1,000 பதவிகளுடன் 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை
வழங்கும்.

முன்னதாக, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் எல்மினா பிசினஸ் பார்க், சுங்கை
பூலோவில் RM9.4 பில்லியன் முதலீட்டு மதிப்பில் முதலீடு செய்தது, இதனால் அதிக
மதிப்புள்ள வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளது.


Pengarang :