NATIONAL

சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு பிரதமர் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், ஜூலை 26: கடந்த ஆண்டு சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட ஷேக் அப்துல்லா அமிருல் ஷேக் அபு பக்கரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.

ஷேக் அப்துல்லா அமிருல் இப்போது படுத்த படுக்கையாக இருப்பதாகவும், அவரின் சிகிச்சை செலவு மாதம் ஆயிரக்கணக்கில் ரிங்கிட்டை எட்டியதாகவும் பிரதமர் முகநூலில் பகிர்ந்தார்.

“அவரின் தந்தை ஷேக் அபு பக்கார் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக நிலைமை இன்னும் மோசமாகியது. இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

“இந்த குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஷேக் அப்துல்லா அமிருல் குணமடைய பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் அனைத்து காரியங்களை எளிதாக்கி இந்த குடும்பத்திற்கு சோதனையை எதிர்கொள்ள வலிமை அளிக்கட்டும்,” என்று அவர் கூறினார்.

மருத்துவ மற்றும் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை எளிதாக்கும் நோக்கில் இந்த நன்கொடையை அவரது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசி மூலம் வழங்கியதாகப் பிரதமர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :