NATIONAL

அரசுத் துறைகள் மற்றும் நிறுவனக் கட்டிடங்களில் சோலார் முறையில்  மின்சார உபயோகத்தை மாநில அரசு ஊக்குவிக்கிறது

ஷா ஆலம், ஜூலை 26: அரசுத் துறைகள் மற்றும் நிறுவன வளாகங்கள் அல்லது கட்டிடங்களில் சோலார் முறையில்  மின்சார உற்பத்தியை  நிறுவ மாநில அரசு ஊக்குவிக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

சோலார் முறையிலான  மின்சாரம்,  ஆற்றல் நுகர்வு செலவுகளை குறைக்க உதவுவதுடன், பசுமை தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் உதவும் என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

முன்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவும் திட்டங்களில் பிபிடிகள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள்  அதிக கவனம் செலுத்தியதாகவும், ஆனால் தற்போது அரசு நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“பொதுமக்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்த  விரும்பினால், அதை முதலில் செய்ய வேண்டும், இது போன்ற முயற்சிகள் பலனை தருகின்றன என்பதை அரசாங்க நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சுல்தான் இட்ரிஸ் ஷா கட்டிடம், ஷா ஆலமில் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜெய்ஸ்) மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் ஜிஎஸ்பார்க்ஸ் சென்டிரியன் பெர்ஹாட் ஆகியவற்றின் இடையே சோலார் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் ஜெய்ஸின் இயக்குநர் டத்தோ முகமட் ஷாஜிஹான் அஹ்மட் மற்றும் மாநில சில்லறை வணிகத் தலைவர் (சிலாங்கூர்) தெனாகா நேஷனல் பெர்ஹாட், அஹ்மத் பரோடி சே நோ மற்றும் GSPARX சென்டிரியன் பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் எல்மி ஃபைருல் மஹ்சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த ஒத்துழைப்பைப் பற்றி விவரித்த ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் நிலம் மற்றும் கட்டிடங்களில் சோலார் சிஸ்டம்களை நிறுவும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக ஜெய்ஸின் முயற்சியை ஜமாலியா  பாராட்டினார்.

இதற்கிடையில், ஜெய்ஸ் எப்போதும் உறுதியுடன் இருப்பதாகவும், மாநிலத்தில் சோலார் சிஸ்டம் நிறுவும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதாகவும் முகமட் ஷாஜிஹான் கூறினார்.

“இதுவரை, பள்ளிகள், சமய வாலகங்கள், சூராவ்கள் மற்றும் மசூதிகள் கொண்ட 25 கட்டிடங்கள் இந்த நிறுவனத்துடன் சோலார் சிஸ்டம்களை நிறுவ ஒப்புதல் கொடுத்துள்ளன.

“எதிர்காலத்தில் அந்த முயற்சியை மேற்கொள்வதற்காக ஜெய்ஸ் இந்த ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் பல கட்டிடங்களை இலக்காகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :