NATIONAL

துணையமைச்சர் சம்பளத்தையும் சேர்ந்து  425,000 வெள்ளியை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கினார் டத்தோ ரமணன்

சுங்கை பூலோ, ஜூலை 26 – துணை அமைச்சருக்கான சம்பளத்தையும் சேர்ந்து 425,000 வெள்ளியை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு தருவேன் என வாக்குறுதி வழங்கினேன்.

இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் அலவன்சை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கினேன்.

இதுவரை 452,000 ரிங்கிட் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 72 வழிபாட்டுத் தலங்களுக்கு 332,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த சம்பளத்தையும் கடந்த ஜனவரி மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டேன்.
கடந்த 7 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 வழிபாட்டுத் தலங்களுக்கு 153,000 ரிங்கிட் நிதியாக வழங்கப்பட்டது.

இன்று மட்டும் வழிபாட்டுத் தலங்களுக்கு 104,000 ரிங்கிட் வழங்கப்பட்டது. ஆலயம், பள்ளிவாசல், சூராவ், சீன கோயில், தேவாலயம் ஆகியவற்றுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இந்நிதி வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு பணிகளுக்கு, சமூக கடப்பாடு நடவடிக்கைகள் உட்பட இதர தேவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில் இந்நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடரும் என்று டத்தோ ரமணன் கூறினார்.


Pengarang :