கோலாலம்பூர், ஜூன் 26 – 2023 ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) RM613.1 பில்லியன் மதிப்புடன் 5.0 சதவிகிதத்தை எட்டியது. இது 3.6 சதவிகிதம் மலேசியப் பொருளாதார வளர்ச்சியை மிஞ்சியது.

கடந்த ஆண்டு மலேசியாவின் பொருளாதாரத்தில் தொழில்துறை 39.1 சதவீதப் பங்களிப்பை வழங்கியது என புள்ளியியல் துறை அறிவித்தது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84.8 சதவீதத்தை உள்ளடக்கிய சேவை மற்றும் உற்பத்தித் துறைகள் முக்கிய பங்களிப்பாளர்கள் என்று தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் கூறினார்.

“விவசாயத் துறை 9.1 சதவிகிதம் பங்களித்தது. அதைத் தொடர்ந்து கட்டுமானம் (4.5 சதவிகிதம்) மற்றும் சுரங்கம் மற்றும் குவாரி (0.5 சதவிகிதம்) பங்களித்தன” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

– பெர்னாமா